ரயில்வே பணியிடங்களில் உள்ளூர்வாசிகளுக்கு 50 சதவீத இடங்கள் ஒதுக்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி கூறினார்.
ரயில்வே பட்ஜெட் மீது மக்களவையில் நடைபெற்ற விவாதங்களுக்கு வியாழக்கிழமை பதிலளித்து பேசும்போது அவர் இத் தகவலை வெளியிட்டார்.
மேலும் ரயில்வே தேர்வுகளுக்கான கேள்வித்தாள் உள்ளூர் மொழிகளில் தயாரிப்பது குறித்தும் பரிசீலிக்க இருப்பதாக அவர் கூறினார்.
நிபுணர் குழு: ரயில்வே துறை மேம்படுத்தி சீரமைக்க ஃபிக்கி பொதுச் செயலர் அமித் மித்ரா தலைமையில் நிபுணர் குழு அமைக்கப்படும் என்று அவர் அறிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக