இடைத் தேர்தல் போட்டியிடுவது குறித்து ஆகஸ்ட் 1ம் தேதி நடைபெறும் மனித நேய மக்கள் கட்சியின் தலைமை செயற் குழுவில் முடிவு செய்யப்படும் என்று த.மு.மு.க மாநில தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக மாநில தலைவர் ஜவாஹிருல்லா சிவகாசியில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
சிறுபான்மையினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு அளிக்கும் நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா அறிக்கையை லோக்சபாவில் வைக்க வலியுறுத்தி, தமிழகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
அதே போன்று பாபர் மசூதி இடிப்புக்கு காரணமாக இருந்தவர்கள் யார் என்பதை கண்டறிய, அமைக்கப்பட்ட நீதிபதி லிபரான் கமிஷன் அறிக்கையையும் லோக்சபாவில்
தாக்கல் செய்ய வேண்டும்.
தமிழகத்தில் ஐந்து சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலில் போட்டியிடுவது பற்றி ஆலோசனை செய்ய, மனித நேய மக்கள் கட்சியின் தலைமை செயற்குழு கூட்டம் ஆகஸ்ட் முதல் தேதி அன்று சென்னையில் நடைபெறுகின்றது. அதில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக