வங்கி ஏ.டி.எம்.களில் கள்ளநோட்டுகளை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் நமோ நாரயண் மீனா கூறியிருப்பதாவது:
வங்கிகளிலும், வங்கி ஏ.எடி.எம். இயந்திரங்களிலும் கள்ள நோட்டுக்கள் புழங்குவதை தடுக்க ரிசர்வ் வங்கி கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. வங்கி வாடிக்கையாளர்கள் மற்றும் வைப்புத்தொகையின் வட்டி ஆகியவற்றை பாதுகாகும் வகையில் மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதுதொடர்பாக, வங்கிகளுக்கு கீழ்கண்ட பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, வாடிக்கையாளர்களுக்கு பணம் கொடுக்கும்போதும், ஏ.டி.எம் மையங்களில் பணம் வைக்கப்படும் போதும் நல்ல ரூபாய் நோட்டுக்கள் தானா என்பதை வங்கிகள் உறுதி செய்துக்கொள்ள வேண்டும்.
கள்ள நோட்டுக்களை கண்டறியும் இயந்திரங்களை, பணப் பரிமாற்றம் நடைபெறும் அனைத்து வங்கிக் கிளைகளிலும் பொருத்த வேண்டும்.
வங்கிகளின் தலைமை அலுவலங்களில் கள்ள நோட்டுக்களை கண்டறியும் பிரிவை ஏற்படுத்த வேண்டும். கள்ளநோட்டுக்கள் கண்டறியபப்ட்டால் உடனடியாக காவல்துறையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவேண்டும்.
இதுதவிர, வங்கிகளில் பணப்பரிமாற்றம் செய்வது, கள்ள நோட்டுக்களை கண்டறிவது தொடர்பாகவும் வங்கி அதிகாரிகளுக்கும், ஊழியர்களுக்கும் பயிற்சி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் கூறியுள்ளார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக