சனி, 4 ஜூலை, 2009

ஜாக்சன் பெயரில் வைரஸ்-மெயில் வந்தால் உஷார்!

சான் பிரான்சிஸ்கோ: மைக்கேல் ஜாக்சனின் பெயரைப் பயன்படுத்தி இமெயில்கள் மூலம் வைரஸ் பரவி வருகிறது. எனவே ஜாக்சன் என்ற பெயரில் இமெயில் வந்தால் திறந்து பார்க்காமல் அழித்து விடுமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஜாக்சனின் நினைவாக என்ற பொருளில் அனுப்பப்படும் அந்த மெயிலில், ஜிப் பைல் ஒன்று இணைக்கப்பட்டுள்ளது. அதில் மைக்கேல் ஜாக்சனின் இசை வடிவங்கள், இதுவரை பார்த்திராத படங்கள் உள்ளிட்டவை உள்ளதாக அந்த மெயில் கூறுகிறு. அடடா, என்று ஆச்சரியப்பட்டு திறந்து பார்த்தால் அவ்வளவதுதான், கம்ப்யூட்டர் காலியாகி விடுகிறதாம்.

sarah@michaeljackson.com என்ற முகவரியிலிருந்து அந்த மெயில் அனுப்பப்படுகிறது.

இந்த மெயிலைத் திறந்து பார்த்தால் நமது கம்ப்யூட்டர் மட்டுமல்லாது, யுஎஸ்பி மெமரி ஸ்டிக்கையும் இது பாதிக்கிறதாம்.

அதேபோல மைக்கேல் ஜாக்சனின் கடைசிப் படைப்பு வீடியோ என்ற பெயரில் இன்னொரு வைரஸும் பரவுகிறதாம்.

ஜாக்சன் ரசிகர்களே, ஜாக்கிரதை...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin