
ஓரினச் சேர்க்கை தொடர்பாக உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து நெல்லையில் தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருநெல்வேலியில் ஓரினச் சேர்க்கை தொடர்பாக உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஓரினச் சேர்க்கைக்கு உச்சநீதிமன்றம் பச்சைகொடிகாட்டியுள்ளதன் மூலம் ஒழுக்க கேட்டின் வாசலை திறந்துள்ளது. மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், வீரப்ப மொய்லி இதை ஆதரித்திருக்கிறார்கள். இது கன்டனத்திற்குரியது.
ஒருவன் தன்னை தானே கொலை செய்கின்ற தற்கொலையும் சுதந்திரம் தான் அதையும் அவர்கள் அனுமதிப்பார்களா? யாரும் எதையும் செய்வது சுதந்திரம் அல்ல. ஓரினச் சேர்க்கை மூலம் எய்ட்ஸ் பரவுகிறது என்பது உலகறிந்த உண்மை. எனவே அரசு இந்த தீர்ப்பினை வாபஸ் பெற வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் யூசுப் அலி, செயலாளர் சாதிக், மேலாண்மைக் குழுத் தலைவர் சம்சுல் லுகா, மாவட்ட பொருளாளர் நேஷனல் சாகுல் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
செல்வா, திருநெல்வேலி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக