செவ்வாய், 21 ஜூலை, 2009

நாளை சூரிய கிரகணம்: அறிவியல் மையத்தில் பார்க்க சிறப்பு ஏற்பாடு

சூரிய கிரகணத்தைப் பார்க்க திருநெல்வேலியில் உள்ள மாவட்ட அறிவியல் மையத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து கொக்கிரகுளம் அறிவியல் மைய அதிகாரி ஆர். கோபால கிருஷ்ணா திங்கள்கிழமை விடுத்துள்ள செய்திக் குறிப்பு:

புதன்கிழமை (ஜூலை 22) நிகழும் சூரிய கிரகணம் திருநெல்வேலி பகுதியில் காலை 5.30 மணி முதல் காலை 7.13 மணி வரை தெரியும். வானம் தெளிவாக இருந்தால் சூரிய கிரகணத்தை தெளிவாக காணமுடியும்.

திருநெல்வேலி அறிவியல் மையத்தில் காலை 6.10 மணி முதல் 7.13 மணி வரை தொலைநோக்கி மூலம் சூரிய கிரகணத்தை காண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக மாவட்ட அறிவியல் மையத்தில் அன்று காலை 11 மணிக்கு குறும்படம் திரையிடப்படும். 11.30 மணிக்கு சூரிய கிரகணம் குறித்து வினாடி வினா நிகழ்ச்சியும் நடைபெறும் என தெரிவித்துள்ளார் அவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin