வியாழன், 21 மே, 2009

மன்மோகன் சிங் நாளை பதவியேற்பு

தொடர்ந்து இரண்டாவது முறையாக நாட்டின் பிரதமராக மன்மோகன் சிங் வெள்ளிக்கிழமை (மே 22) பதவி ஏற்கிறார்.

ஜவாஹர்லால் நேருவுக்குப் பிறகு தொடர்ந்து இரண்டாவது முறையாக இப்பதவியை ஏற்கும் முதலாவது நபர் என்ற பெருமையையும் மன்மோகன் சிங் பெற்றுள்ளார்.

முன்னதாக மக்களவையில் 322 உறுப்பினர்களின் ஆதரவு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு உள்ளது என்று குடியரசுத் தலைவரிடம் மன்மோகன் சிங் தெரிவித்தார். இதையடுத்து அவரை ஆட்சியமைக்குமாறு குடியரசுத் தலைவர் அழைப்பு
விடுத்தார்

ராசியான நாள்கள்

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு 2004-ம் ஆண்டு பதவியேற்றது. அப்போது நடைபெற்ற நிகழ்வுகளை அப்படியே தற்போதும் கடைப்பிடிக்கிறது

காங்கிரஸ் அரசு மீண்டும் பதவியில் அமர்வதற்கு ராசியான நாள்கள்கள்தான் காரணம் என கட்சி கருதுவதால் அதன்படி நடக்க முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது

2004-ம் ஆண்டு மே 19-ம் தேதியன்று மன்மோகன் சிங் பிரதமராக அறிவிக்கப்பட்டார். இதன்படி இப்போதும் மே 19 அன்று மன்மோகன் சிங் பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்

இதேபோல 2004-ம் ஆண்டு மே 22-ம் தேதி பிரதமராக பதவியேற்றார். அதேவழியில் இப்போதும் மே 22-ம் தேதி வெள்ளிக்கிழமை அவர் பிரதமராக பதவியேற்க உள்ளார்

2004-ம் ஆண்டு ஜூன் 4-ம் தேதி மக்களவைத் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதேபோல தற்போதும் ஜூன் 4-ல் மக்களவைத் தலைவர் தேர்வு செய்யப்பட உள்ளார்.

2004, ஜூன் 5-ம் தேதி மக்களவையின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் உரை நிகழ்த்தினார். அதேபோல தற்போது ஜூன் 5-ம் தேதி நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் உரை நிகழ்த்த உள்ளார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin