ஸ்ரீவை மக்களை பற்றியும் ஊர் நடப்புகளையும் தெரிந்து கொள்ளலாம்,உங்களுடைய கருத்துகளையும் பதிவு செய்யலாம்..
வெள்ளி, 31 ஜூலை, 2009
சென்னையில் ஆகஸ்ட் 5 முதல் மகளிர் சிறப்பு இரயில்கள் இயக்கம்
பெண்களின் கஷ்டத்தை போக்க வரும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் சென்னையில் 3 மகளிர் சிறப்பு இரயில்கள் இயக்கப்பட உள்ளது என்று தெற்கு இரயில்வே கூடுதல் பொதுமேலாளர் கார்மெலஸ் தெரிவித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மதுரை இரயில் நிலையம் ரூ.12 கோடியில் ரீ-மாடலிங் செய்யப்படவுள்ளது. ரூ.5 கோடியில் ‘எஸ்கலேட்டர்’ அமைக்கப்படவுள்ளது. பாண்டியன் விரைவு இரயிலில் படுக்கை விரிப்பு வசதி முதலில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
சென்னை சென்ட்ரல்-நாகர்கோவில் செல்லும் ஏழைகள் ரதம் சிறப்பு இரயில் தொடர்ந்து இயக்கப்படும். மதுரை-செங்கல்பட்டு இடையே மின்மயமாக்கும் பணி 2010ம் ஆண்டு மார்ச்சுக்குள் முடிவடையும். போடி- மதுரை, விருதுநகர்-மானாமதுரை, திண்டுக்கல்-போத்தனூர் பாதைகள் விரைவில் அகல பாதைகளாக மாற்றப்படும்.
இரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட புதிய இரயில்களை இயக்குவதற்கே 300 கோச்கள் பற்றாக்குறையாக உள்ளது. இந்நிலையில், தீபாவளி நெரிசலை தவிர்க்க மதுரை-சென்னை இடையே புதிதாக இரயில்களை இயக்குவது தற்போது சாத்தியமில்லை.
சென்னையில் வேலைக்கு செல்லும் பெண்கள், இரயில்களில் படும் கஷ்டத்தைப் போக்க சென்னை-தாம்பரம், சென்னை-வேளச்சேரி, சென்னை-அரக்கோணம் இடையே பெண்கள் மட்டுமே பயணிக்கும் மகளிர் சிறப்பு தினசரி இரயில்கள் வரும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் இயக்கப்படும். இதை இரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி தொடங்கி வைக்கிறார் என்று கார்மெலஸ் தெரிவித்தார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக