துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் ஆகஸ்ட் 4, 5 ஆகிய தேதிகளில் பிரசாரம் செய்கிறார்.
தமிழகத்தில் ஆகஸ்ட் 18ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்கும் ஸ்ரீவைகுண்டம், கம்பம், இளையான்குடி, தொண்டாமுத்தூர், பர்கூர் ஆகிய 5 தொகுதிகளில் தி.மு.க. பொருளாளரும், துணை முதல்வருமான மு.க.ஸ்டாலின் 10 நாள் பிரசாரம் மேற்கொள்கிறார்.
மு.க.ஸ்டாலின், தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் ஆகஸ்ட் 4, 5 ஆகிய தேதிகளில் பிரசாரம் செய்கிறார். பின்னர் ஆகஸ்ட் 6, 7 ஆகிய தேதிகளில் கம்பம் தொகுதியில் பிரசாரம் செய்கிறார். 8, 9 ஆகிய தேதிகளில் இளையான்குடி தொகுதியிலும், 12, 13 ஆகிய தேதிகளில் தொண்டாமுத்தூரிலும், 14, 15 தேதிகளில் பர்கூரிலும் துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்கிறார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக