ஞாயிறு, 19 ஜூலை, 2009

25ம் தேதி குற்றாலம் சாரல் விழா தொடக்கம் - அமைச்சர்கள் பங்கேற்பு


குற்றாலத்தில் சாரல் விழா வரும் 25ம் தேதி ஆரம்பமாகிறது. இதில் சபாநாயகர், 4 அமைச்சர்கள் கலந்து கொள்கிறார்கள்.

குற்றாலம் கலைவாணர் அரங்கில் ஆண்டுதோறும் சாரல் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு விழா வரும் 25ம் தேதி ஆரம்பமாகி ஆகஸ்ட் மாதம் 1ம் தேதி வரை நடக்கிறது.

குற்றாலம் கலைவாணர் அரங்கில் 25ம் தேதி மாலை 5 மணிக்கு சாரல் விழா துவக்க விழா நடக்கிறது. சபாநாயகர் ஆவுடையப்பன் தலைமை வகிக்கிறார். கலெக்டர் ஜெயராமன் வரவேற்கிறார். சாரல் விழாவை துவக்கி வைத்து வீட்டு வசதி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பேசுகிறார்.

கலைநிகழ்ச்சிகளை துவக்கி வைத்து சுற்றுலா துறை அமைச்சர் சுரேஷ் ராஜன், பல்வேறு போட்டிகளை துவக்கி வைத்து அமைச்சர் மைதீன்கான், குத்துவிளக்கேற்றி
அமைச்சர் பூங்கோதை பேசுகின்றனர். எம்பி லிங்கம், எம்எல்ஏ கருப்பசாமி பாண்டியன் முன்னிலை வகிக்கின்றனர்.

எம்பி ராமசுப்பு, எம்எல்ஏக்கள் பீட்டர் அல்போன்ஸ், மாலைராஜா, அப்பாவு, வேல்துரை, வசந்தகுமார், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் கிரகாம்பெல், கருப்பசாமி, சதன் திருமலைகுமார், வேளாண் விற்பனை குழு தலைவர் கணேசன், குற்றாலம் டவுண் பஞ் தலைவர் ரேவதி உள்பட பலர பேசுகின்றனர். டிஆர்ஓ ரமண சரஸ்வதி நன்றி கூறுகிறார்.

கலைநிகழ்ச்சிகள்

அன்று மாலை 5 மணிக்கு ஆழிதிருவரங்கம் சகோதரிகள் அபிராமி-ஆனந்தி ஆகியோரின நாதஸ்வர இன்னிசை நிகழ்ச்சி, 5.30 மணிக்கு அரசு இசை பள்ளி மாணவிகளின் பரத நாட்டியம், இரவு 7 மணி்க்கு சின்ன திரை இயக்குனர் ராஜ்குமாரின் அசத்தபோவது யாரு நிகழ்ச்சி நடக்கிறது.

துவக்க விழா வரவேற்பு நிகழ்ச்சியில் மாவட்ட அரசு இசைப்பள்ளி மாணவர்களின் மங்கள இசை, பரதநாட்டியம், மண்டல கலை பண்பாட்டு மையம் சார்பில் தோட்டாக்குடி மாரியப்பன் குழுவினரின் நையாண்டி மேளம், கரகாட்டம், பொய்கால் குதிரையாட்டம், காவடியாட்டம், மயிலாட்டம் நிகழ்ச்சிகளும் நடக்கிறது என்று கலெக்டர் ஜெயராமன் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin