வெள்ளி, 5 ஜூன், 2009

துபாயில் இஸ்லாமிய வங்கியியல் கருத்தரங்கு

துபாய் இந்தியன் இஸ்லாமிக் சென்டர் சார்பில் வெள்ளிக்கிழமை பகல் 2 மணிக்கு இஸ்லாமிய வங்கியியல் குறித்த கருத்தரங்கு தேரா அல் முத்தீனா சாலையில் உள்ள இந்தியன் இஸ்லாமிக் சென்டர் வளாகத்தில் நடைபெறுகிறது.

இஸ்லாமிய அறிஞர் டாக்டர் அப்துல் முனீம் பெல்லாஹ் குர்ஆனிய வழியில் இஸ்லாமிய பண நிர்வாகம் எனும் தலைப்பிலும், பயிற்சியாளரின் அனுபவங்கள் எனும் தலைப்பில் துபாய் இஸ்லாமிய வங்கியின் ஜாபர் அலியும்,

இஸ்லாமிய வங்கியியல் துறைகள் குறித்து அபுபக்கர் அல் பலாஹியும், தற்போதைய பொருளாதார பின்னடைவும், இஸ்லாமிய வங்கியியலும் எனும் தலைப்பில் ஹெச்.எஸ்.பி.சி. வங்கியின் இமாத் அலியும் உரை நிகழ்த்த உள்ளனர்.

மேலும் துபாய் இந்தி்யன் இஸ்லாமிக் சென்டரின் தலைவர் சையத் கலீல், செயலாளர் பி.டி.அப்துல் ரஹ்மான், துபாய் இஸ்லாமிய வங்கியின் அம்மர் அஹ்மத், இந்தியன் இஸ்லாமிக் சென்டர் துணைத் தலைவர் சல்மான் அஹ்மத், இஸ்லாமிய வங்கியியல் ஆலோசகர் எம்.கே. ஜமான் ஆகியோரும் பேசுவர்.

கருத்தரங்கில் பங்கேற்போருக்கு மதிய உணவும், இஸ்லாமிய வங்கியியல் குறித்த சி.டியும் வழங்கப்படும்.

கருத்தரங்கில் பங்கேற்க முன்பதிவு செய்வோருக்கு மட்டுமே அனுமதியளிக்கப்படும்.

தொடர்புக்கு: 04 - 272 6800 / 050 - 880 8312

மின்னஞ்சல்: shavab@gmail.கோ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin