ஷார்ஜா கடல்சார் அருங்காட்சியத்தை அந்நாட்டு அரசர் ஷேக் சுல்தான் பின் முஹம்மத் திறந்து வைத்தார்
ஷார்ஜாவின் அல் கான் பகுதியில் உருவாக்கப்ப்டடுள்ள புதிய கடல்சார் அருங்காட்சியகத்தை ஷார்ஜா அரசர் டாக்டர் ஷேக் சுல்தான் பின் முஹம்மத் அல் காஸிமி திறந்து வைத்தார்.
1960க்குப் பின்னர் கடல்சார் வணிபத்திலிருந்து ஏற்பட்ட மாற்றத்தையும் விளக்கும் வண்ணம் பல்வேறு தகவல்கள் இந்த அருங்காட்சியகத்தில் இடம்பெற்றுள்ளன
மேலும் தொடுதிரைக் கணினியும் இந்த அருங்காட்சியகத்தில் உள்ளது. இதில் ஆங்கிலம் மற்றும் அரபி மொழியில் கடல்சார் குறித்த தகவல்களை அறிந்து கொள்ளலாம்.
இந்த அருங்காட்சியகத்தை சனிக்கிழமை முதல் வியாழக்கிழமை வரை காலை 8 மணி முதல் மாலை 8 மணி வரையும், வெள்ளிக்கிழமை மாலை 4 மணி முதல் 8 மணி வரையும் பார்வையிடலாம்.
இதனைப் பார்வையிட பெரியவர்களுக்கு 10 திர்ஹமும், சிறியவர்களுக்கு 5 திர்ஹமும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது
இதைத் தொடர்ந்து கடல்சார் பூங்கா ஒன்றும் அமைக்கப்படவுள்ளது. இதில் பழங்கால பாய்மரக்கப்பல்களும், அல் சாமா போன்ற புதிதாக வடிவமைக்கப்ட்டுள்ள பாரம்பரிய கப்பல்களும் இடம்பெறும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக