திங்கள், 8 ஜூன், 2009

களைகட்டிய குற்றால சீசன்


குற்றாலத்தில் சாரல் மழை துவங்கியுள்ளதால் குற்றால சீசன் மீண்டும் களைகட்டத் துவங்கியுள்ளது. குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து வீழ்வதால் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகரித்துள்ளது.

குற்றாலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான செங்கோட்டை, தென்காசி ஆகிய பகுதிகளில் நேற்று முதல் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக குற்றாலத்திலும் மேகமூட்டத்துடன் குளிர்ந்த காற்றுடன் குளுமையான சீதோஷ்ணநிலையே நிலவி வருகிறது. அனைத்து அருவிகளிலும் தண்ணீர் விழுவதால் சுற்றுலாப் பயணிகள் ஆனந்தமாக குற்றால சீசனை அனுபவித்து வருகின்றனர்.

நன்றி : அலக்ஸ், தென்காசி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin