திருச்செந்தூரிலிருந்து சென்னை செல்லும் வாராந்திர ரயிலை தினசரி ரயிலாக இயக்குவது குறித்து பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஜெயந்த் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறிய அவர், விழுப்புரம்- மயிலாடுதுறை இடையே அகலப்பாதை அமைக்கும் பணி 3 மாதத்தில் முடிவடையும். அதன் பின்னர் திருச்செந்தூர் ரயில் தினசரி ரயிலாக இயக்கப்படும்.
மதுரை-திண்டுக்கல் இடையே 2வது அகலப்பாதை அமைக்கும் பணி முடிந்து விட்டது. செங்கல்பட்டு- விழுப்புரம் இடையே 2வது அகலப்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் 2 ஆண்டுகளில் முடிவடையும். சென்னை- திருச்சி அகலப்பாதை மின் மயமாக்குதல் பணி 3 மாதங்களில் முடிந்துவிடும்.
புறநகர் ரயில் பயணிகள் வரிசையில் நிற்காமல் உடனடியாக ரயில் டிக்கெட்டுகளை பெறும் வகையில், ஸ்மார்ட் கார்டு முறையில் டிக்கெட் எடுப்ப்பதில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் எழும்பூர் நிலைய மேலாளர் கோவிந்தசாமி, தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி பூபதி உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்துக்கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக