வெள்ளி, 12 ஜூன், 2009

உலகின் சிறந்த விமான நிலையம் சியோல்!


உலகின் மிகச் சிறந்த விமான நிலையமாக தென்கொரிய தலைநகர் சியோலின் இன்சியான் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இரண்டாவது இடத்தில் ஹாங்காங்கின் சர்வதேச விமான நிலையமும், மூன்றாவது இடத்தில் சிங்கப்பூர் சாங்கி விமான நிலையமும் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

கடந்த 11 ஆண்டுகளாக உலகின் சிறந்த விமான நிலையங்களைப் பட்டிலிட்டு வருகிறது பிரிட்டனின் ஸ்கைட்ராக்ஸ் ஆராய்ச்சி நிறுவனம்.

இதில் தொடர்ந்து எட்டு ஆண்டுகள் முதலிடத்தில் இருந்து ஹாங்காங் விமான நிலையமே.

இந்த முறைதான் அந்தப் பெருமை தென்கொரியாவுக்குப் போய்விட்டது. டெர்மினலைப் பராமரிக்கும் பாங்கு, பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் பயணிகளுக்கான வசதிகள் என அனைத்திலுமே இன்சியான் விமான நிலையம் மிகச் சிறப்பாக செயல்படுவதாக ஸ்கைட்ராக்ஸ் தெரிவித்துள்ளது.

நான்காவது சிறந்த விமான நிலையமாக ஜூரிச், ஐந்தாவது இடத்தில் மியூனிச் விமான நிலையமும் இடம் பெற்றுள்ளன.

ஜப்பானின் கன்சாய்க்கு 6-வது இடமும், கோலாலம்பூருக்கு 7வது இடமும், ஆம்ஸ்டர்டாம் விமான நிலைத்துக்கு 8-வது இடமும், ஜப்பானின் கன்சாய்க்கு 9வது இடமும் நியூஸிலாந்தின் ஆக்லாந்து விமான நிலையத்துக்கு 10 இடமும் தரப்பட்டுள்ளது.

இந்த டாப் 10 விமான நிலையங்களில் ஒரு இடம் கூட இந்தியாவுக்கு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இத்தனைக்கும் இங்கு டெல்லி உள்ளிட்ட பல விமான நிலையங்கள் தனியார்மயமாக்கப்பட்டு அழகுபடுத்தப்பட்டுள்ளன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin