வெளிநாட்டில் தீவிரவாத பயிற்சிக்கு அனுப்பப்படும் இளைஞர்கள் பட்டியலில் நெல்லை பகுதியை சேர்ந்தவர்களும் இருக்கலாம் என்ற திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன.
டெல்லியில் தீவிரவாதி முகமது உமர் மத்னி கைது செய்யப்பட்டு பல திடுக்கிடும் தகவல்கள் போலீசுக்கு கிடைத்துள்ளன. சென்னையை சேர்ந்த 30 இளைஞர்களை தேர்ந் தெடுத்து தீவிரவாத பயிற்சி கொடுத்து, இந்தியாவில் நாசவேலைகளில் ஈடுபட திட்டமிட்டிருந்த திடுக்கிடும் தகவல்களும் கிடைத் துள்ளன.
இதன் அடிப்படையில் நெல்லை போலீசாரும், சிறப்பு புலனாய்வு போலீசாரும் தீவிர கண்காணிப்புடன் உள்ளனர்.
சென்னையில் தேர்ந்தெடுக்கப்படும் இளைஞர்களில் கணிசமான பேர் நெல்லை பகுதியை சேர்ந்தவர்களாக இருக்கும் என்றும் போலீசார் கருது கிறார்கள்.
ஏற்கனவே நெல்லை பகுதியில் வெவ்வேறு கட்டங்களில் பல்வேறு தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நெல்லை மேலப் பாளையத்தை சேர்ந்த பிரபல தீவிரவாதி முகமது அலி தேடப்படும் முதல் குற்றவாளியாக உள்ளார். இவருடன் சேர்ந்து மேலும் சில தீவிரவாதிகளும் தலைமறைவாகி உள்ளனர்.
இதில் முகமது அலி, பாகிஸ்தான் தீவிரவாதி களுடன் தொடர்பு கொண்டு அங்குள்ள தீவிரவாத குழுக் களில் ஐக்கியமாகி விட்டதாக சிறப்பு புலனாய்வு போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர்.
இதனால் அவனது தூண்டுதலின் பேரில் நெல்லை பகுதியில் உள்ள சில இளைஞர்களையும் தீவிரவாத பயிற்சிக்கு டெல்லியில் பிடிபட்ட முகமது உமர் மத்னி தேர்ந்தெடுத்திருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்துள்ளது.
இதனால் தமிழ் நாட்டில் சென்னைக்கு அடுத்தபடியாக போலீசார் நெல்லையில் அதிக விழிப்புடன் உள்ளனர். சந்தேகப்படும் படியான வாகனங்களை சோதனை இடுவது மற்றும் தங்கும் இடங்களில் நீண்ட நாட்கள் தங்கி இருப்பவர்களை பற்றியும் போலீசார் ரகசியமாக கண்காணித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை மற்றும் நெல்லை யில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு புலனாய்வு போலீ சாரும் தீவிரவாதிகள் தொடர்பு குறித்து ரகசிய விசாரணையில் இறங்கி உள்ளனர்.
மேலும் முக்கிய பகுதிகள், ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள் போன்ற இடங்களிலும் கூடுதல் போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.
தகவல் : மாலைமலர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக