அஹ்மதி முஸ்லிம்களுக்கு தனி மயானம் வேண்டும் என்று தமிழக அரசுக்கு அஹ்மத் முஸ்லிம் ஜமா-அத் கோரிக்கை விடுத்துள்ளது.
சென்னை அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமா-அத் தலைவர் பஷாரத் அஹ்மது ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:
"அஹ்மதி முஸ்லிம் சமயத்தை சேர்ந்த மும்தாஜ் பேகம் உடல் நலக்குறைவு காரணமாக இறந்தார். இவரது உடலை ஆதம்பாக்கம் முஸ்லிம் மயானத்தில் அடக்கம் செய்ய முதலில் அனுமதியளித்த அந்த நிர்வாகம் திடீரென மறுத்தது.
இதைத் தொடர்ந்து ராயப்பேட்டை முஸ்லிம் மயானத்தில் முறையாக அனுமதி பெற்று மே 31-ல் அடக்கம் செய்தோம். அப்போது சிலர், "அஹ்மதி முஸ்லிம்கள், முஸ்லிம்களே அல்ல' என்று கூறி அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து நாங்கள் ராயப்பேட்டை போலீஸ் நிலையத்திலும், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் புகார் செய்தோம். அவர்கள் உரிய பாதுகாப்பு வழங்குவதாக கூறியதைத் தொடர்ந்து நாங்கள் நிம்மதியடைந்தோம். அந்த பெண்ணின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு கிருஷ்ணாம்பேட்டை இந்துக்கள் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்ட தகவலை பத்திரிகைகளைப் பார்த்துதான் நாங்கள் தெரிந்து கொண்டோம். இது மனிதாபிமானமற்ற செயல் என்றார் அவர்
தகவல் : தினமணி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக