திங்கள், 8 ஜூன், 2009

தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள்: பார்வையற்ற மாணவ, மாணவிகளுக்கு உதவி

தூத்துக்குடி மாவட்டத்தில், எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 தேர்வுகளில் மாவட்ட அளவில் முதல் 3 இடங்களைப் பெற்ற பார்வையற்ற மாணவ, மாணவிகளுக்கு அமைச்சர் பி. கீதா ஜீவன் சனிக்கிழமை உதவித் தொகை வழங்கினார்.

2007- 2008-ம் கல்வியாண்டில் மாவட்ட அளவில் முதல் 3 இடங்களைப் பெற்ற பார்வையற்ற மாணவ, மாணவிகளுக்கு உதவித் தொகை மற்றும் பார்வையற்றவரைத் திருமணம் செய்யும் பார்வையுள்ளோருக்கு நிதியுதவித் தொகை வழங்கும் விழா அமைச்சர் பி. கீதா ஜீவனின் இல்லத்தில் நடைபெற்றது.

எஸ்எஸ்எல்சி தேர்வில் மாவட்ட அளவில் முதல் 3 இடங்களைப் பெற்ற 3 பேர் மற்றும், பிளஸ் 2 தேர்வில் மாவட்ட அளவில் முதல் 3 இடங்களைப் பெற்ற 4 பேர் என மொத்தம் 7 மாணவ, மாணவிகளுக்கு ரூ. 1.01 லட்சம் உதவித் தொகை வழங்கப்பட்டது.

மேலும், பார்வையற்றவரைத் திருமணம் செய்யும் பார்வையுள்ளோருக்கு நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ் 3 பேருக்கு தலா ரூ. 20 ஆயிரம் வீதம் ரூ. 60 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், மாவட்ட ஊனமுற்றோர் மறுவாழ்வு அலுவலர் டி. மனோகரன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் சக்திதாசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin