ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி ஆற்று பாலத்திற்கு கீழ்புறம் ஒரு பெண் பிணம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக சப்-இன்ஸ்பெக்டர் முத்துராமன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.
அப்போது அங்கு 50 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் பிணமாக கிடந்தார். அவரது கழுத்தில் மஞ்சள் தாலிகயிறு இருந்தது. அருகில் செருப்பை கழற்றி வைத்திருந்தார். அதன் அருகே ஒரு விஷப்பாட்டிலும் இருந்தது.
தூத்துக்குடியில் இருந்து ஸ்ரீவைகுண்டம் வந்ததற்கான பஸ் டிக்கெட்டும் இருந்தது.
இதைத் தொடர்ந்து போலீசார் அந்த பெண் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பினார்கள். அப்போது அந்த பெண் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.
அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? எதற்காக விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார் என்று தெரியவில்லை.
இதுகுறித்து ஸ்ரீவைகுண்டம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக