தூத்துக்குடி சுப்பையா வித்யாலயா பள்ளி மாணவி திலகவதி நர்சிங் பாட பிரிவில் மாநிலத்தில் முதலிடத்தை பிடித்து உள்ளார். இவர் அந்த பாடத்தில் 196 மார்க் பெற்று உள்ளார்.
இதே பள்ளியை சேர்ந்த மகாலட்சுமி புவியியல் பாடத்தில் 196 மார்க் எடுத்து மாநில அளவில் 2-வது இடத்தை பிடித்து உள்ளார்.
மேலும் இதே பள்ளியை சேர்ந்த கவுரி நித்யா என்ற மாணவி அட்வான்ஸ்டு தமிழ் என்ற பாடத்தில் 181 மார்க் எடுத்து மாநிலஅளவில் 2-வது இடத்தை பிடித்து உள்ளார்.
இதே பள்ளியை சேர்ந்த திவ்யா என்ற மாணவி அட்வான்ஸ்டு தமிழ் பாடத்தில் 180 மதிப்பெண் பெற்று 3-வது இடத்தை பிடித்து உள்ளார்.
சாலை புதூர் நித்யா ரிபேக்கால் அக்கவுண்ட்ஸ் பாடத்தில் மாநிலத்தில் 3-வது இடத்தை பிடித்துள்ளார். காயல்பட்டணம் மாணவி சண்முகப்பிரியா ஊட்டச்சத்து மற்றும் மனையியல் பாடத்தில் மாநில அளவில் முதலிடம் பிடித்து உள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக