வெளி நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு விமான நிலையங்கள், துறைமுகங்களில் பன்றிக் காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாக தமிழக அரசின் தலைமைச் செயலர் கே.எஸ்.ஸ்ரீபதி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை
தமிழகத்தில் பன்றிக் காய்ச்சல் வராமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. விமான நிலையம் மற்றும் துறைமுகங்கள் வழியாக வெளி நாடுகளிலிருந்து வரும் பயணிகளைப் பரிசோதிக்க மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதுவரை சென்னை, கோவை, திருச்சி ஆகிய விமான நிலையங்கள், சென்னை மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களுக்கு வந்த 34 ஆயிரத்து 293 பயணிகளுக்கும் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் எவருக்கும் பன்றிக் காய்ச்சல் இல்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக