செவ்வாய், 5 மே, 2009

தங்க மதிப்பீட்டாளர் பயிற்சி

நவீன முறையில் தங்க மதிப்பீட்டாளர் பயிற்சி வரும் 11ஆம் தேதி துவங்குகிறது.

கிண்டியில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் மேம்பாட்டு நிலைய இயக்குநரகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், சென்னையில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் மேம்பாட்டு நிலைய அலுவலகத்தில் தங்க மதிப்பீட்டாளர் பயிற்சி 11ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த பயிற்சி நவீன முறையான டச் ஆசிட் முறையில் கற்றுக் கொடுக்கப்படும். இந்திய அரசின் நகை மதிப்பீட்டாளர் சான்றிதழ் வழங்கப்படும்.

இந்த பயிற்சியை முடித்தவர்கள் நாட்டுடைமை வங்கி மற்றும் கூட்டுறவு வங்கிகளில் வேலை வாய்ப்பு பெற உதவும்.

மேலும் சுய தொழிலாக நகை அடகுக் கடை மற்றும் நகை வியாபாரம் செய்ய உதவும்.

இந்த பயிற்சிக்காக ரூ.3,500 கட்டணம் செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு 50 சதவீத கட்டண சலுகை உண்டு.

இந்த பயிற்சி குறித்து மேலும் விவரம் அறிய, 044 - 2250 0765, 2250 1011, 2250 1012, 2250 1013 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin