செவ்வாய், 5 மே, 2009

தமிழ்நாட்டில் 1? லட்சம் இடங்களுக்கு என்ஜினீயரிங் விண்ணப்பங்கள்; நாளை முதல் வினியோகம்

2009-10ம் ஆண்டுக்கான என்ஜினீயரிங் மாணவர் சேர்க்ககை குறித்து சென்னை அண்ணா பல்கைலக்கழக துணைவேந்தர் மன்னர் ஜவகர் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

“பி.இ.”, “பி.டெக்.” படிப்புக்கான விண்ணப்ப விநியோகம் நாளை (6-ந் தேதி) தொடங்குகிறது. தமிழ்நாடு முழுவதும் உள்ள 58 மையங்களில் விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்படுகிறது.

காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்படும். 12, 13, 16 மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்பட மாட்டாது.

தமிழகத்தில் தற்போது 354 என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளன. இதில் 333 தனியார் சுயநிதி கல்லூரிகளும், 10 அரசு உதவிபெறும் கல்லூரிகளும், 11 பல்கலைக்கழக கல்லூரிகளும் அடங்கும்.

இதன்மூலம் 1 லட்சத்து 35 ஆயிரம் இடங்களுக்கு மாணவர்கள் சேர்க்கை நடைபெறும். இதில், 85 ஆயிரம் இடங்கள் கவுன்சிலிங் மூலம் நிரப்பப்படும். மீதமுள்ள 50 ஆயிரம் இடங்கள் தனியார் நிர்வாக ஒதுக்கீட்டிற்குரியது.

இந்த ஆண்டு 14 கல்லூரிகள் புதிதாக அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளன. அனுமதி வழங்குவதற்கான கல்லூரிகளுக்கு அனுமதி கிடைக்கும் என இப்போது கூற இயலாது.

சென்னை அண்ணா பல்கலைக்கழக கட்டுப்பாட்டுக்கு கீழ் வர 40 கல்லூரிகள் அனுமதி கேட்டுள்ளன. எப்படியிருந்தாலும் இதன் மூலம் 25 ஆயிரம் இடங்கள் கூடுதலாக கிடைக்க வாய்ப்பு உள்ளது. மொத்தம் 1 லட்சத்து 60 ஆயிரம் என்ஜினீயரிங் சீட்டுகள் இந்த ஆண்டு நிரப்பப்படும்.

கடந்த ஆண்டு 1 லட்சத்து 40 ஆயிரம் விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்பட்டன. இந்த ஆண்டு 1 லட்சத்து 60 ஆயிரம் விண்ணப்பங்கள் அச்சிடப்பட்டுள்ளன. முதல் கட்டமாக 1 லட்சத்து 10 ஆயிரம் விண்ணப்பங்கள் மையங்களுக்கு அனுப்பப் பட்டுள்ளன.

இது கடந்த ஆண்டைவிட 10 சதவீதம் கூடுதலாகும். விண்ணப்பங்கள் வருகிற 30-ந் தேதி வரை வினியோகிக்கப்படும். விண்ணப்பங்களை 31-ந் தேதி மாலை 5.30 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
பாதிப்பு இல்லை
விண்ணப்பங்களை ரூ.500 ரொக்கமாக கொடுத்து பெற்றுக்கொள்ளலாம். இன்டர்நெட் மற்றும் தபால் மூலமாகவும் அவற்றை பெறலாம். ஜூன் மாதம் இறுதியில் கவுன்சிலிங் தொடங்கும்.
புதிய கல்லூரிகள் பற்றிய தகவல் வெப்சைட்டில் போடப்படும். என்ஜினீயரிங் படிப்புக்கு எப்போதுமே தனிமவுசு உண்டு. தொழில் நுட்ப துறை வீழ்ச்சியால் எந்த பாதிப்பும் இல்லை.
புதிய படிப்புகள் அறிமுகம்
இந்த ஆண்டு என்ஜினீ யரிங் படிப்பில் “எம்.இ.” ஸ்பேஸ்டெக்னாலஜி, எம்.பி.ஏ- ஹாஸ்பிடாலிட்டி மேனேஜ்மெண்ட், அட் வான்ஸ் ஆர்க்கிடெக்சர் ஆகிய முதுகலை புதிய படிப்புகள் தொடங்கப்படு கிறது.
இவ்வாறு அவர் கூறி னார்.
பேட்டியின் போது பல்கலைக்கழக செயலாளர் ரெய்மன்ட், இயக்குனர் ராமலிங்கம் ஆகியோர் உடன் இருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin