தமிழக தலைமை தேர்தல் அதி காரி நரேஷ் குப்தா, முகப்பேரில் வசித்து வருகிறார். இவருக்கு முகப்பேர் டிவிஎஸ் காலனியில் உள்ள மீனாட்சி மெட்ரிகுலே ஷன் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் ஓட்டு உள்ளது.
இதே வாக்குச் சாவடியில்தான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் தா.பாண்டியனுக்கும் ஓட்டு உள்ளது. எனவே காலையில் இருந்து பத்திரிகையாளர்கள் காத்திருந்தனர். தா.பாண்டியன் குடும்பத்துடன் வந்து ஓட்டுப் போட்டார். வாக்குப் பதிவு முடியும் நேரம் வரையில் நரேஷ் குப்தா ஓட்டு போட வரவில்லை.
வேலைப் பளு காரணமாக அவர் ஓட்டு போட முடியவில்லை என்று அவர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக