மருத்துவ படிப்புக்கான விண்ணப்பம் ஜூன் 3ஆம் தேதி முதல் வினியோகம் செய்யப்படுகிறது என்று மருத்துவ தேர்வு குழு செயலர் டாக்டர் ஷீலா தெரிவித்தார்
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், 15 அரசு மருத்துவ கல்லூரிகள், 4 தனியார் மருத்துவ கல்லூரிகள் ஆகியவற்றில் மருத்துவ பட்டப்படிப்பு படிப்பதற்கான மொத்த அரசு இடங்கள் 1463. இதற்கான விண்ணப்பங்கள் ஜூன் 3ஆம் தேதி முதல் வினியோகம் செய்யப்படுகிறது.
விண்ணப்பத்தின் விலை ரூ.500. அனைத்து மருத்துவ கல்லூரிகளிலும் இதை பெறலாம். அன்று முதல் 10 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று மருத்துவர் ஷீலா கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக