ஸ்ரீவைகுண்டத்தில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து நடிகர் எஸ்.எஸ். சந்திரன் சனிக்கிழமை இரவு பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் பேசுகையில், மத்திய, மாநில அரசுகளால் விலைவாசியைக் கட்டுப்படுத்த முடியவில்லை
தங்கத்தின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. சிமென்ட் விலை, தீப்பெட்டி விலை என அனைத்து அத்தியாவசியப் பொருள்களின் விலைகளும் உயர்ந்துள்ளன.
எனவே ஏறிவரும் விலைவாசியைக் கட்டுப்படுத்த அதிமுக அணிக்கு வாக்களியுங்கள் என்றார் அவர்.
அவருடன் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் எஸ். திருப்பாற்கடல் உள்ளிட்டோர் சென்றனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக