காசாவில் மக்கள் வாழும் பகுதிகள் மீது இஸ்ரேல் மீண்டும் குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளது.
நேற்று இஸ்ரேல் ராணுவம் காசா மீது மீண்டும் தாக்குதல் நடத்தியது. காசா-எகிப்து எல்லையில் விமானங்கள் மூலம் குண்டு வீசி இந்த தாக்குதலை நடத்தியது. இதில் 2 பேர் பலியானதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேல் குண்டு வீச்சு தாக்குதலால் இஸ்ரேல் - காசா இடையே மீண்டும் போர் பதட்டம் உருவாகி உள்ளது.
இஸ்ரேல் ராணுவம் சில மாதங்களுக்கு முன்பு காசா மீது தாக்குதல் நடத்தியது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக