தூத்துக்குடி மக்களவைத் தொகுதி சமக வேட்பாளர் கராத்தே சரவணனை ஆதரித்து ஸ்ரீவைகுண்டம் ஒன்றியத்தில் அக் கட்சித் தலைவர் ஆர். சரத்குமார் சனிக்கிழமை பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது: மத்திய, மாநில அரசுகளின் தவறான அணுகுமுறையால் நாடு பொருளாதார நெருக்கடியை நோக்கிச் செல்கிறது. பணவீக்கம் உள்ளிட்ட பிரச்னைகளால் மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். பாஜக ஆட்சிக்கு வந்தால் இலங்கைப் பிரச்னை 100 நாளில் தீர்க்கப்படும் என்றார்
ஸ்ரீவைகுண்டம் பஸ் நிலையம் அருகேயுள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு அவர் மாலை அணிவித்தார்.
தொடர்ந்து, நளராஜபுரம், பேட்துரைச்சாமிபுரம், நவலட்சுமிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சரத்குமார் பிரசாரம் செய்தார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக