வெள்ளி, 15 மே, 2009

மக்களவைத் தேர்தல்: வாக்கு எண்ணிக்கை நாளை துவக்கம்

தூத்துக்குடி மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கை அரசு பாலிடெக்னிக் மையத்தில் நாளை பலத்த பாதுகாப்புடன் துவங்குகிறது.

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் விளாத்திகுளம், கோவில்பட்டி, ஓட்டப்பிடாரம் (தனி), ஸ்ரீவைகுண்டம், தூத்துக்குடி, திருச்செந்தூர் ஆகிய 6 சட்டசபை தொகுதிகள் உள்ளது. புதிதாக வரையறை செய்யப்பட்டுள்ள தூத்துக்குடியில் முதல் பாராளுமன்ற உறுப்பினர் யார் என்பது குறித்து நாளை காலையில் துவங்கும் வாக்கு எண்ணிக்கையின் போது தெரியவரும்.

தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதையொட்டி வாக்குபதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. மேலும் நாளை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை துவங்குவதால் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடத்திற்கு செல்ல வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று வாக்கு பதிவு நடைபெறுவது குறித்த கலெக்டர் பிரகாஷ் முன்னிலையில் வாக்குகள் எண்ணப்படுவது குறித்து செயல்முறை விளக்கம் செய்து காட்டப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 69 சதவீதம் பேர் வாக்களித்து உள்ளனர். 6 லட்சத்து 97 ஆயிரத்து 730 வாக்காளர்கள் வாக்களித்து உள்ளனர். இந்நிலையில் தூத்துக்குடி தொகுதியில் அதிகபட்ச வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளதால் அரசியல் கட்சியினர் இடையே வெற்றி பெற போகும் கட்சி எது என்பது குறித்து பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியூள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin