வியாழன், 21 மே, 2009

மின்னஞ்சல் மூலம் தகவல் பரிமாற்றம்: பள்ளிகளுக்கு முதன்மை கல்வி அதிகாரி உத்தரவு



தமிழகத்தில் பள்ளிகளில் இருந்து இனி எந்த தகவலும் மின்னஞ்சல் மூலமாகவே அனுப்ப வேண்டும் என தூத்துக்குடியில் நடைபெற்ற தலைமை ஆசிரியர்களுக்கான லேப்டாப் பயிற்சியில் முதன்மை கல்வி அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 37 அரசு மேல் நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு 3நாள் கம்ப்யூட்டர் பயிற்சி, தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது

இந்த பயிற்சியை துவக்கி வைத்து பேசிய மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பிரைட் சேவியர், தமிழக அரசு தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளை கொண்டு வர ஏற்பாடு செய்து அதற்கான முயற்சிகளில் கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது

மேலும், சென்னையில் இருந்து இனிமேல் கல்வித்துறை இயக்குநர் நேரடியாக அரசு பள்ளி தலைமையாசிரியர்களை நேரடியாக தொடர்பு கொள்வார்கள். எந்த தகவலும் இனிமேல் மின்னஞ்சல் மூலமே அனுப்ப வேண்டும். இதனால் லேப்டாப் கையாள்வதை முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும் என்று முதன்மை கல்வி அதிகாரி பிரைட் சேவியர் தெரிவித்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin