குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் சார்பில் கடந்த 24ம் தேதி குவைத், மன்சூரிய்யா அல் அரபி விளையாட்டரங்கம் அருகே 'ரிஃபாயி தீவானியா' அரங்கத்தில் தமிழிலேயே சுய முன்னேற்றம் மற்றும் தன்னம்பிக்கை பயிலரங்கம் நடைபெற்றது
சங்க துணைத் தலைவர் முஹம்மது மீராஷா தலைமையேற்க, குவைத் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அமைப்பாளரான டாக்டர் அன்வர் பாட்சா முன்னிலை வகிக்க, சங்க ஃபத்வா குழு உறுப்பினர் முஹம்மது நிஜாமுத்தீன், சங்க இணைப் பொதுச் செயலாளர் அப்துல் நாஸர், பொதுச் செயலாளர் பரங்கிப்பேட்டை கலீல் அஹ்மத், சங்கத்தின் இணைப் பொருளாளர் முஹம்மது நாஸர், சங்கத்தின் உலமா குழு மூத்த உறுப்பினர் முஹம்மது இப்ராஹீம், கொள்கை பரப்பு குழு உறுப்பினர் ஷேக் தாவூத் ஆகியோர் பேசினர்.
சங்க கல்விக்குழு செயலாளரும், திருநெல்வேலி ஷஃபி கல்வி அறக்கட்டளையின் தாளாளரும், குவைத் இண்டிகிரேடட் கலாசாலையின் நிர்வாக அதிகாரியுமான பேராசிரியர் அப்துல் ஹமீத் சுய முன்னேற்றம் மற்றும் தன்னம்பிக்கை குறித்த விளக்கவுரை, ஆலோசனைகளை வழங்கினார்
சங்கத்தின் பயிற்சி மற்றும் வழிகாட்டல் குழுச் செயலாளர் மஹ்பூப் பாஷா பயிலரங்கம் குறித்து முடிவுரை நிகழ்த்தினார். இறுதியில் பயிற்சியில் கலந்து கொண்டவர்களின் கருத்து பரிமாற்றங்களும் நடந்தன.
இந்த பயிலரங்கில் குவைத்தின் பல பகுதிகளிலிருந்தும் தமிழகம் மற்றும் இலங்கையைச் சேர்ந்த சங்க உறுப்பினர்களான உலமாக்கள், தொழிலதிபர்கள், வியாபாரிகள், பணியாளர்கள், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தோர் பங்கேற்று பயன் பெற்றனர்.
அதே போல குவைத் ஹவல்லி பகுதியில் அமைந்துள்ள அஃஷ்ஷைக்கா பள்ளிவாசலில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை சங்கத்தின் சார்பாக நடந்து கொண்டிருக்கும் ஹதீஸ் விளக்க வகுப்புகளின் 140வது வார வகுப்பை சங்கத்தின் கொள்கை பரப்பு குழு உறுப்பினர் ஜைனுல் ஆபிதீன் நடத்தினார். இவ்வகுப்புகளில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
சங்கத்தின் செயல்பாடுகள் குறித்த மேலதிக விவரங்களுக்கு www.k-tic.com இணையதளத்தை நாடலாம்.
மின்னஞ்சல்கள்: q8tic@yahoo.com / ktic.kuwait@gmail.com
யாஹூ குழுமம்: http://groups.yahoo.com/group/K-Tic-group
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக