வெள்ளி, 1 மே, 2009

ஸ்ரீவைகுண்டம் சிறையில் வீடியோ கான்பரன்சிங்-ரூ. 10 கோடி மிச்சம்

ஸ்ரீவைகுண்டம்: வீடியோ கான்பரன்சிங் மூலம் சிறையில் இருந்தபடியே கைதிகளிடம் விசாரணை நடத்தப்படுவதால், அரசுக்கு ரூ. 10 கோடி செலவு மிச்சமாயிருப்பதாக சிறைதுறை டிஜிபி தெரிவித்துள்ளார்.

ஸ்ரீவைகுண்டத்தில் இருக்கும் மாவட்ட சிறைக்கு நேற்று தமிழக சிறைத்துறை தலைமை இயக்குனர் டிஜிபி நடராஜ் வந்தார். அவர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகளுக்கான வசதிகள், அவர்களின் நிலைமை, உணவு சுகாதாரம் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில்,

ஸ்ரீவைகுண்டம் சிறைச்சாலைக்கு மாவட்ட சிறை அந்தஸ்து கொடுக்கப்பட்டுள்ளது. 72 பேர் இங்கு இருக்கலாம். தற்போது 41 பேர் உள்ளனர்

தமிழகத்தில் உள்ள சிறைகளில் 60 நாட்கள், 90 நாட்கள் விசாரணை கைதிகள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படாமல் உள்ளனர். தமிழகத்தில் இதுபோன்று 700 பேர் உள்ளனர். தமிழகத்தில் 134 சிறைகளில் 16 ஆயிரத்து 200 சிறைக்கைதிகளில் இன்னும் 700 பேருக்கு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவில்லை.

சிறைகளில் 100க்கு நூறு கல்விதிட்டம் மத்திய துணை சிறைகளில் உள்ளவர்களுக்கும், 3 வருடங்களுக்கு மேல் உள்ளவர்களுக்கு சிறப்பு கல்வி திட்டம், தொழிற்கல்வி, பட்டப்படிப்பு, ஆகியவை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தற்போது துணை சிறையில் உள்ளவர்களுக்கும் இத்திட்டம் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது

இதற்கு சர்வ சிக்சா அபியான், மத்திய அரசின் மனித வளமேம்பாட்டு திட்டம் ஆகியவற்றின் மூலம் புதிய புத்தகங்கள், எழுதுபொருட்கள் வழங்கப்பட்டுள்ளது

வீடியோ கான்பிரன்சிங் மூலம் 278 சிறைகள் 17 நீதிமன்றங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. இன்னும் 78 பாக்கியுள்ளது. தற்போது பாதுகாப்பிற்காக போலீசார் அனுப்பப்படும் போலீசாருக்கு செய்யும் செலவபு நாள் ஒன்றுக்கு ரூ. 2 ஆயிரத்தில் இருந்து ரூ. 200 ஆக குறைந்துள்ளது.

800 போலீசாரின் வேலை குறைந்ததால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.10 கோடி ரூபாய் செலவு மிச்சப்படுத்தப்பட்டு்ள்ளது என்றார்

தகவல் : தட்ஸ்தமிழ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin