
மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) நடத்திய ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பதவிகளுக்கான தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த 96 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.
இதில் சென்னை அண்ணாநகரில் உள்ள கணேஷ் ஐஏஎஸ் அகாதெமியைச் சேர்ந்த சசிகாந்த் செந்தில் (29) (படம்), அகில இந்திய அளவில் 9-வது ரேங்க் பெற்று தமிழகத்துக்கு சிறப்பு சேர்த்துள்ளார்.
அதற்கடுத்து மனித நேயம் நடத்தும் இலவச ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற அருண்சுந்தர் தயாளன் 22-வது ரேங்க் பெற்றுள்ளார். கணேஷ் பயிற்சி மையத்தைச் சேர்ந்த சௌம்யா (11-வது ரேங்க்), சுப்ரஜா (95-வது ரேங்க்) ), ஆனந்த் (96-வது ரேங்க்) என முதல் 100 இடங்களுக்குள் தேர்வு பெற்றுள்ளனர்.
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் 791 பணியிடங்களுக்கு, கடந்த 2008-ம் ஆண்டு நடத்திய முதல்நிலைத் தேர்வில் 3,18,843 பேர் பங்கேற்றனர்.
அதற்கடுத்து நடைபெற்ற முதன்மைத் தேர்வில் 11,849 பேர் வெற்றி பெற்றனர். இதில் 2,140 பேர் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டனர். நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டவர்களில் தற்போது 791 பேர் இறுதி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 625 ஆண்கள், 166 பெண்கள். முதல் 25 இடங்களைப் பெற்ற மாணவர்களில் மூன்று பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள்.
சென்னையில் உள்ள சைதை சா.துரைசாமியின் மனித நேயம் இலவச பயிற்சி மையத்தில் 24 பேர் தேர்வாகி உள்ளனர். கணேஷ் பயிற்சி மையத்தில் 30 பேர், சங்கர், சத்யா உள்ளிட்ட பயிற்சி மையங்களில் பயிற்சி பெற்றவர்கள் உள்பட 96 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்
பஞ்சாயத்து அமைப்புகளை ஒழுங்குபடுத்துவேன்: அகில இந்திய அளவில் 9-வது ரேங்க் பெற்று சாதனை படைத்த சசிகாந்த் செந்திலை பற்றிய விவரம்:
இவர் கடந்த 2000-ம் ஆண்டு திருச்சியில் உள்ள ஆர்.இ.சி.யில் (தற்போது தேசிய கல்வி நிறுவனம்- என்.ஐ.டி.) எலெக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேஷன் முடித்தார். அதன்பிறகு "போலரிஸ்' கம்ப்யூட்டர் நிறுவனத்தில் 2 ஆண்டுகள் பணிபுரிந்து வந்தார்.
பின்னர் தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் இணைந்து சமூகப் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அதைத்தொடர்ந்து ஐ.ஏ.எஸ். படிப்பில் நாட்டம் கொண்டு, கணேஷ் பயிற்சி மையத்தில் சேர்ந்து யு.பி.எஸ்.சி. தேர்வை எழுத ஆரம்பித்தார். நான்கு முயற்சிகளுக்கு பிறகு தற்போது வெற்றி பெற்றுள்ளதோடு 9-வது ரேங்க்கையும் பிடித்துள்ளார்.
அவர் தன்னுடைய வெற்றி குறித்து கூறுகையில், ""தற்போது உள்ளாட்சி அமைப்புகள் (பஞ்சாயத்து ராஜ்) மூலம் மக்களுக்கு கிடைக்கும் அதிகாரத்தை ஒழுங்குபடுத்தவே ஐ.ஏ.எஸ். ஆகிறேன்'' என்றார
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக