பத்திரப் பதிவுக் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த அமைப்பின் தென்காசி மக்களவைத் தொகுதி செயல்வீரர்கள் கூட்டம், மேலாண்மைக் குழு உறுப்பினர் ûஸபுல்லாஹாஜா தலைமையில் கடையநல்லூரில் நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்டத் தலைவர் யூசுப்அலி, செயலர் சாதிக், துணைத் தலைவர் ஜபருல்லா, விருதுநகர் மாவட்டத் தலைவர் அக்பர் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
கடையநல்லூரைத் தலைமையிடமாகக் கொண்டு தனி வட்டமும், தென்காசியைத் தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டமும் அமைக்க வேண்டும்.
அரசு மருத்துவமனைகளில் அனைத்து வகை மருத்துவ நிபுணர்களையும் நியமிப்பதுடன், நவீன மருத்துவ வசதியையும் ஏற்படுத்த வேண்டும். கடையநல்லூரில் பாதாளச் சாக்கடை வசதி ஏற்படுத்த வேண்டும்.
கடையநல்லூர் நகராட்சி வாரச் சந்தையை உழவர் சந்தையாக மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இத் தீர்மானக் கடிதத்தை பீட்டர்அல்போன்ஸ் எம்எல்ஏவிடம் தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் அளித்தனர்.
தகவல் : தினமணி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக