விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் பெருமளவில் இலங்கைக்கு ஆயுதங்களை வழங்கி வரும் சீனா, தற்போது 1 மில்லியன் டாலர் நிதியுதவியயை அளிக்கிறது.
மனிதாபிமான நடவடிக்கைகளுக்காக இந்த நிதியுதவியை அளிக்கிறதாம் சீனா. இடம் பெயர்ந்து வந்த தமிழர்களுக்கு உதவ இந்த நிதியை இலங்கை பயன்படுத்திக் கொள்ளுமாம்.
இதுகுறித்து சீன உள்நாட்டுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஷாஸூ செய்தியாளர்களிடம் கூறுகையில், இலங்கையின் உள்நாட்டு விவகாரத்தில் நாங்கள் மிகுந்த அக்கறை செலுத்துகிறோம்.
இலங்கையில் சமூக ஸ்திரத்தன்மை, தேசிய மறு சீரமைப்பு ஆகியவற்றை பராமரிக்க இலங்கை மக்களுக்கு அடிப்படை உரிமை உண்டு. இதை உலக சமுதாயமும் உணர் வேண்டும்.
விரைவில் அங்கு அமைதியும், ஸ்திரத்தன்மையும் நிலவ வேண்டும். இலங்கை வளர்ச்சிப் பாதையில் நடைபோட வேண்டும் என விரும்புகிறோம் என்றார் அவர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக