அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் அங்குள்ள பெரிய பாங்கியான லெக்மேன் பிரதர்ஸ் உள்பட பல பாங்கிகள் திவால் ஆயின.
மேலும் பல பாங்கிகள் நிலைமை மோசமாக இருந்தது. எனவே அமெரிக்க அரசு அந்த பாங்கிகளுக்கு நிதி உதவிகள் செய்து அவை திவால் ஆகாமல் காப்பாற்றியது.
இப்போது மேலும் 10 பாங்கிகள் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. இந்த பாங்கிகள் அனைத்துமே அமெரிக்காவில் பெரிய பாங்கிகள் வரிசையில் உள்ளவை ஆகும்.
இவற்றுக்கு ரூ.3 லட்சத்து 20 ஆயிரம் கோடி பணம் அவசரமாக தேவைப்படுகிறது. இந்த பணம் இருந்தால்தான் அவற்றால் தொடர்ந்து வியாபார நடவடிக்கைகளை தொடர முடியும் என்ற நிலை உள்ளது. இல்லை என்றால் அவை திவால் ஆகும் ஆபத்து ஏற்பட்டு இருக்கிறது.
எனவே இந்த பாங்கிகளுக்கும் அரசு உதவி அளிப்பது குறித்து ஆலோசித்து வருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக