அதிசயங்கள் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம்.துபாயில் நிகழ்ந்த ஒரு அதிசயத்தைத் தான் இங்கே நாம் குறிப்பிட்டுள்ளோம்.
ஆட்டுப்பால் பற்றி அனைவரும் அறிந்துள்ளோம். ஆனால் ஆண் ஆடு பால் கொடுக்குமா? ஆம். கொடுத்துள்ளது இங்கல்ல அபுதாபியில்.
அபுதாபி அருகேயுள்ள அல் அய்ன் என்ற இடத்தில் விவசாயி ஒருவரின் ஆண் ஆடு, பெண் ஆட்டைப் போலவே அரை லிட்டர் அளவுக்கு பால் கொடுத்துள்ளது.இத்தகவலை டபிள்யூ.ஏ.எம் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
கலிபா சுவேதான் என்ற விவசாயி தன்னுடைய ஆண் ஆட்டிற்கு வழக்கமான சோதனை நடத்திய போது, அதன் உடலில் மாற்றங்களை அறிந்தார்.
அடுத்த சில தினங்களில் அந்த ஆடு சுமார் அரை லிட்டர் அளவு தரமான பாலை சுரந்ததாக அந்த விவசாயி கூறியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
தகவல் : டபிள்யூ.ஏ.எம் செய்தி நிறுவனம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக