ஞாயிறு, 12 ஏப்ரல், 2009

ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்தவர் சாப்ட்வேர் என்ஜினீயரிடம் சூட்கேஸ் அபேஸ்; கேரளாவை சேர்ந்தவர் கைது

ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்தவர் மாரிமகேஷ் . இவர் சென்னையில் சாப்ட்வேர் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். இவர் இன்று சென்னை செல்வதற்காக நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்துக்கு வந்தார். பின்னர் டிக்கெட் வாங்குவதற்காக டிக்கெட் கவுண்டரில் வரிசையாக நின்றார். அப்போது அவர் தனது 2 சூட்கேஸ்களை ஒருஓரமாக வைத்திருந்தார்.

இந்தநிலையில் டிக்கெட் வாங்கிவிட்டு வந்து சூட்கேசை பார்த்த போது அவரது 2 சூட்கேஸ்களையும் காணவில்லை. இது குறித்து மாரிமகேஷ் நெல்லை சந்திப்புரெயில் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராஜ், சப்-இன்ஸ்பெக்டர் வேணுகோபால் ஆகியோர் விசாரணை நடத்தினர். அப்போது ஒருநபர் 2 சூட்கேஸ்களுடன் சந்திப்பு ரெயில் நிலையம் பிட்லைன் வழியாக நடந்து செல்வதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீசார் விரைந்து சென்று அந்த நபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் கேரள மாநிலம் கராட்டாபள்ளியை சேர்ந்த சசிதரன் (வயது 60)என்பதும் அவர் மாரிமகேசின் சூட்கேஸ்களை திருடியதும் தெரியவந்தது.இதைத்தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து அவரிடமிருந்த சூட்கேஸ்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அதை மாரிமகேஷிடம் போலீசார் ஒப்படைத்தனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin