துபாய் வானலை வளர்தமிழ்- தமிழ்த் தேரின் நான்காம் ஆண்டு துவக்க விழா மற்றும் 'அமீரகத் தமிழ் இலக்கியக் கலைவிழா' வரும் 17ம் தேதி நடக்கிறது.
துபாய், எமிரேட்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் ஸ்கூல், அல்- சஃபா பார்க் அருகே நடக்கும் இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக முனைவர். பர்வீன் சுல்தானா மற்றும் கவிஞர் யுகபாரதி ஆகியோர் பங்கேற்கின்றனர்.
இதில் 'சுப்ரமணியபுரம்' - திரைப்பட குழுவினருக்கு(இயக்குநர் சசிகுமார், இசையமைப்பாளர் ஜேம்ஸ்வசந்தன், நடிகர் ஜெய், நடிகை சுவாதி,பாடகர் பெல்லிராஜ் ) ஆகியோருக்கு பாராட்டு விழாவும்,
குடந்தை அஸ்ரப், திருச்சி சரவணக்குமார், திண்டுக்கல் சரவணன் ஆகியோரின் நகைச்சுவை நிகழ்ச்சிகளும்
தமிழோடு விளையாடு- தமிழ்த் திறனுக்கான பரிசுப் போட்டி, மற்றும் குழந்தைகளின் நடன நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன என வானலை வளர்தமிழ் - தமிழ்த்தேர் அமைப்பின் கலைச் செயலாளர் சிம்மபாரதி தெரிவித்துள்ளார்.
மேல் விவரங்களுக்கு: சிம்மபாரதி-050 5646267, காவிரிமைந்தன்- 0502519693, ஜியாவுதீன்-0504226752, முகவை முகில்-0508650456 ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.
துபாயில் ஜோடிப் பொருத்தம் நிகழ்ச்சி:
துபாயில் யு.ஏ.இ. தமிழ்ச் சங்கம் ( http://www.uaetamilsangam.com ) வரும் 23ம் தேதி மாலை கராமா சென்டரில் ஜோடிப் பொருத்தம் நிகழ்ச்சியை நடத்துகிறது.
வினோத விளையாட்டு மற்றும் சிறப்பு உடை அணியும் போட்டி உள்ளிட்ட பல போட்டிகள் யு.எ.இ. தமிழ்ச் சங்க உறுப்பினர்களுக்காக பிரத்யேமாக நடத்தப்படுகிறது.
சிறப்பு உடை அணியும் போட்டியில் ஆறு வயதுக்குட்பட்டவர்கள் ஒரு பிரிவாகவும், ஏழு முதல் 12 வயதுக்குட்பட்டோர் மற்றொரு பிரிவாகவும், 13 முதல் 18 வயதுக்குட்பட்டவர்கள் பிரிதொரு பிரிவாகவும் நடத்தப்படும்.
ஜோடிப் பொருத்தம் நிகழ்ச்சியில் பத்து ஜோடிகள் குழுக்கள் முறையில் தேர்வு செய்யப்பட்டு பங்கேற்க அனுமதிக்கப்படுவர். வினோத விளையாட்டு நிகழ்ச்சியில் இரண்டு நிமிடம் தமிழில் பேசும் போட்டி நடத்தப்படும்.
நிகழ்ச்சியினைத் தொடர்ந்து இரவு உணவும் வழங்கப்படும்.
இந்நிகழ்வில் பங்கேற்க விரும்புவோர் ரமேஷ் 050 586 5375 / சலீம் கான் 050-3184073 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.மின்னஞ்சல்: ramesh_vis@hotmail.com
துபாயைக் கலக்கி வரும் அலசல் நிகழ்ச்சி..:
தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் மாறுபட்ட நிகழ்ச்சியாக அலசல் நிகழ்ச்சி தமிழன் டிவியில் பதினேழு வாரங்களாக மக்களின் பேராதரவோடு ஒவ்வொரு ஞாயிறு இரவு இந்திய நேரப்படி பதினொன்று முப்பது மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது
இலங்கை தமிழர்களின் பிரச்சனை, ராகிங் கொடுமைகளுக்கான தீர்வு,வெளிநாட்டில் வேலை இழந்தோருக்கான ஆறுதல் வழங்கி அவர்களுக்கு வழிகாட்டி வருகிறது இந்நிகழ்ச்சி.
மக்களோடு கலந்துரையாடும் நிகழ்ச்சி ஒவ்வொரு திங்கள் மாலை இந்திய நேரப்படி ஆறு முப்பது மணியிலிருந்து எழு முப்பது வரை நிகழ்ச்சியில் பங்கேற்று பேசலாம்.அழைக்க வேண்டிய தொலைபேசி எண் 00971 4 3530607. இந்நிகழ்ச்சியினை உருவாக்கி தொகுத்து வழங்குபவர் துபாயில் பணிபுரிந்து வரும் இளையான்குடியை சேர்ந்த முஹம்மது பைசல்.
இன்னும் பல நிகழ்ச்சிகளை பொதுமக்களுக்கு பயன்படும்படி வழங்க திட்டமிட்டுள்ளார்
வரும் ஞாயிறு நாடாளுமன்ற தேர்தலும் மக்களின் விருப்பமும் என்ற தலைப்பு ஒளிபரப்பாக உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக