அஸ்ஸல்லம் அழைக்கும் ( வரஹ் )
ஸ்ரீவையில் வரும் மே 2 ஆம் தேதி இஸ்திமா மற்றும் மே 9, 10 11 ஆகிய தேதிகளில் கந்தூரியும் நடைபெற உள்ளது.
மே 2 ஆம் தேதி சென்னை ஸ்ரீவை ஜமாஅத் சார்பாக சென்ற ஆண்டு போலவே இந்த ஆண்டும் சிறப்பாக இஸ்திமா நடத்த திட்டமிட்டு உள்ளனர்.
மே 9, 10 11 ஆகிய தேதிகளில் ஸ்ரீவை ஜமாஅத் சார்பாக கந்தூரி நடத்தப்படும் என்று எதிர்ப்பார்க்கபாடுகிறது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு சென்னை ஸ்ரீவை ஜமாத்தின் பொது குழு கூட்டம் நடைபெற்றது. அப்போது இஸ்திமா மற்றும் கந்தூரி பற்றி விவாதிக்கப்பட்டது. அப்போது ஊரில் கந்தூரி விழா எடுக்க 70% சென்னை வாழ ஸ்ரீவை மக்கள் ஆதரிக்கவில்லை.மீதி 30% சென்னை வாழ ஸ்ரீவை மக்கள் கந்தூரி எடுக்க வேண்டும் என்று கூறினார்.
பல வருடங்களாக நடந்து வரும் கந்தூரி நிகழ்ச்சிகளை உடனே நிறுத்த வேண்டும் என்பது இயலாத காரியம். இதனை படிப்படியாக குறைத்து கொள்ளலாம். திருகுரான், முஹம்மத் நபி அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் ஹதிஸ்களில் கூட கந்தூரி பற்றிய செய்திகள் இல்லை என்பது அனைவரும் அறிந்த ஒன்று ஆகவே இதனை குறைத்து கொள்ளலாம்.
மேலும் திருகுரான் தமிழ் விளக்கங்கள், முஹம்மத் நபி அவர்களின் வாழ்க்கை வழிகள் அறிய ஆரம்பித்தால் கந்தூரி போன்ற நிகழ்ச்சிகளில் இருந்து தானாகவே விலகி விடலாம் என்பது மறுக்க முடியாத உண்மை.
தற்போது நமது ஊரை சுற்றி உள்ள பல ஊர்களில் கந்தூரி விழா நிறுத்தப்பட்டு உள்ளது என்பதை அனைவரும் அறியோம்.
நமது ஊரில் கந்தூரி கொடியேற்றம் ஒருபுறம் நடத்தலும், அதை கரத்தலும், நாவாலும், மனதாலும் தடுக்கநினைக்கும் கூட்டம் மறுபக்கம் என ஸ்ரீவை மக்கள் இருந்தாலும் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதே எங்களது எண்ணம்.
இஸ்லாமிய மார்க்க விஷயத்தில் நமது ஊர் மக்கள் முன்னேறி இருப்பது மகிழ்ச்சியகளும் பெருமையாக உள்ளது.
மற்ற ஊர்களை போல நமது ஊரிலும் இன்ஷா அல்லா வரும் காலங்ககில் ஹபிஷாகளும், இமாம்களும் உருவாக்க நாம் முயற்சி செய்யோம்.
நமது ஊர் மக்களுக்குள் எந்த ஒரு பகைமையும் இல்லாமல் ஒற்றுமையாக இருக்க எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிவானாக ஆமீன்.
இதனை பற்றிய உங்களின் மேலான கருத்துக்களையும் அனுப்பி வைக்கும் அல்லது நீங்களும் நமது வெப் சைட்யில் உங்கள் கருத்துக்களை பதியலாம்.
வஸ்ஸலம்:srivaimakkal@gmail.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக