ஞாயிறு, 19 ஏப்ரல், 2009

விவசாயிகளின் நண்பனாக இருப்பேன்: தூத்துக்குடி தே.மு.தி.க. வேட்பாளர் சுந்தர் உறுதி

ஆழ்வார்திருநகரி ஒன்றிய தே.மு.தி.க. செயல்வீரர்கள் கூட்டம் குரும்பூர் டி.ஏ.பி. கல்யாண மண்டபத்தில் நடந்தது.

கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் சோமசுந்தரம் தலைமை தாங்கினார். ஒன்றிய இளைஞரணி செயலாளர் ஜெயசேகரன், இணைச் செயலாளர் குரும்பூர் முகம்மது ரபீக், அவைத்தலைவர் மாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.

மாவட்ட செயலாளர் கோமதி ஆ.கணேசன் வரவேற்று பேசினார்.

கூட்டத்தில் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் எம்.எஸ்.சுந்தர் கலந்து கொண்டு பேசியதாவது:-

நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை அனைவரும் ஒற்றுமையாக அமைதியாக தேர்தல் பணியாற்ற வேண்டும்.

நான் வெற்றி பெற்றால் இந்த பகுதி உள்பட தொகுதியின் அனைத்து பகுதியிலும் விவசாயிகளின் நண்பனாக இருந்து அவர்களின் தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றுவேன்.

மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தும் அனைத்து தரப்பு மக்களையும் சென்றடையச் செய்வேன். கடலில் வீணாக கலக்கும் தாமிரபரணி ஆற்று நீரை சேமிக்க ஆங்காங்கே தடுப்பணைகள் கட்ட முயற்சிப்பேன்.

இவ்வாறு தே.மு.தி.க. வேட்பாளர் எம்.எஸ்.சுந்தர் பேசினார்.

மாநில கலை இலக்கிய அணி செயலாளர் சீனிவாச ராகவன், மீனவரணி செயலாளர் பீட்டர் ராஜ், மாவட்ட விவசாய அணி செயலாளர் பேராசிரியர் ராஜமார்த்தாண்டன், மாவட்ட இளைஞரணி செய லாளர் உமரி சத்தியசீலன் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.

முடிவில் குரும்பூர் நகர தலைவர் அன்சார் அலி நன்றி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin