வெள்ளி, 13 மார்ச், 2009

கிரிடிட் கார்டுகள் வாழ்வை சேதப்படுத்தும் : துபாயில் மவ்லவி செய்யது அபுதாஹிர் ஆலிம் பேச்சு


கிரிடிட் கார்டுகள் வாழ்க்கையினை சேதப்படுத்தக்கூடியது என மவ்லவி டி.எஸ்.ஏ. செய்யது அபுதாஹிர் ஆலிம் துபாயில் சுன்னத் ஜமாஅத் ஐக்கியப் பேரவை 11.03.2009 புதன்கிழமை மாலை அஸ்கான் டி பிளாக்கில் ஏற்பாடு செய்திருந்த மீலாது விழாவில் தெரிவித்தார்.
துவக்கமாக அப்துல் ஹமீது நூரி ஆலிம் இறைவசனங்களை ஓதினார் ஈமான் அமைப்பின் மீலாது விழா சிறப்பு அழைப்பாளர் மவ்லவி டி.எச்.ஏ செய்யது அபுதாஹிர் ஆலிம் சுன்னத் ஜமாஅத் ஐக்கியப் பேரவை ஏற்பாடு செய்திருந்த மீலாதுப் பெருவிழாவில் பங்கேற்று உரை நிகழ்த்தினார். அதன் விபரம் வருமாறு :
அகிலத்திற்கெல்லாம் அருட்கொடையாக உதித்தவர் அண்ணல் நபி ( ஸல்) . அவர்கள் கற்றுத்தந்த வழிமுறைகளைப் பின்பற்றி நாம் வாழ்வில் உயர்நிலையினை அடைய முயற்சிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். நமக்கு அளிக்கப்பட்ட நிஃமத்களுக்கு இறைவனுக்கு நன்றி செலுத்த வேண்டுடியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
கிரிடிட் கார்டு எனும் கடன் அட்டைகள் நமது வாழ்வினை சீரழிக்கக் கூடியது. அதனை உணர்ந்து நாம் அதனைத் தவிர்க்க வேண்டும் என்றார். நிகழ்ச்சியினை முஹம்மது மஃரூப் ஒருங்கிணைத்தார். முஹ்ம்மது ஈஸா நன்றியுரை நிகழ்த்தினார். துஆவிற்குப் பின்னர் நிகழ்ச்சி நிறைவுற்றது. பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சியின் முடிவில் இரவு உணவுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நன்றி : புகைப்படம், I.M.A - துபாய்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin