வியாழன், 26 மார்ச், 2009

புதிய தொகுதி தூத்துக்குடி



தொகுதி மறுசீரமைப்பில் தூத்துக் குடி லோக்சபா தொகுதி புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.

இத்தொகுதியில் உள்ள சட்டசபைத் தொகுதிகள்

1. விளாத்திகுளம்
2. தூத்துக்குடி
3. திருச்செந்தூர்
4. ஸ்ரீவைகுண்டம்
5. ஒட்டப்பிடாரம் (தனி)
6. கோவில்பட்டி

மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை :

ஒன்பது லட்சத்து 39 ஆயிரத்து 711.
ஆண் கள்: நான்கு லட்சத்து 60 ஆயிரத்து 262;
பெண்கள்: நான்கு லட்சத்து 79 ஆயிரத்து 449.

தொகுதி மறுசீரமைப்பிற்குமுன் நெல்லை, திருச்செந்தூர், சிவகாசி ஆகிய மூன்று லோக்சபா தொகுதிகளில் மேற் கண்ட ஆறு சட்டசபை தொகுதிகள் இருந்தன. மறுசீரமைப்பில் சாத்தான்குளம் சட்டசபை தொகுதி நீக்கப்பட்டுவிட்டது.

போட்டியிட வாய்ப்பு யாருக்கு:

நாடார் சமுதாயத்தினர் பெரும்பான்மையாக இருக்கும் இத்தொகுதியில், சி.எஸ்.ஐ., நாடார் பிரிவைச் சேர்ந்தவர் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும். அ.தி.மு.க., சார்பில் தூத்துக்குடி தொழிலதிபர் ராஜன், முன்னாள் எம்.எல்.ஏ.,டேனியல் ராஜ் உட்பட 30க்கும் மேற்பட்டோர் போட்டியிட மனு செய்துள்ளனர்.

தேர்தல் செலவை வைகுண்டராஜன் ஏற்றுக் கொள்வார் என உறுதியளிக்கப்பட்டுள்ளதால் தொழிலதிபர் ராஜனுக்கு அதிக வாய்ப்புள்ளது. அ.தி.மு.க., கூட்டணியில் தூத்துக்குடி தொகுதி ம.தி.மு.க.,வுக்கு ஒதுக்கப்பட் டால் அக்கட்சி பொதுச்செயலர் வைகோ போட்டியிடுவார் எனத் தெரிகிறது. ஏனெனில், விருதுநகரை விட தூத்துக்குடி தொகுதியில் வைகோவுக்கு வெற்றிவாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. வைகோ விருதுநகரில் போட்டியிட்டால் அக்கட்சி மாவட்ட செயலர் ஜோயல் தூத்துக்குடியில் போட்டியிடுவார் எனப்படுகிறது.

தி.மு.க., கூட்டணி:

தி.மு.க., சார்பில், திருச்செந்தூர் எம்.பி.,யும், மத்திய அமைச்சருமான ராதிகா செல்வி இத்தொகுதியில் போட்டியிட முயற்சி செய்து வருகிறார். தூத்துக்குடி மாவட்ட செயலர் பெரியசாமி தன் மகன் ஜெகனுக்கு வாய்ப்பளிக்குமாறு கட்சி தலைமையிடம் கேட்டுள்ளார். காங்கிரசிற்கு தொகுதி ஒதுக்கப்பட்டால் ஆலங்குளம் சார்லஸ், வடக்கு மாவட்ட தலைவர் கதிர்வேல், தெற்கு மாவட்ட இளைஞர் காங்., தலைவர் விஜயசீலன் <உள்ளிட்ட வாசன் ஆதரவாளர்களும், இளங்கோவன் ஆதரவாளரான ஏ.பி.சி.வி., சண்முகமும் போட்டியிட வாய்ப்பு கேட்கின்றனர்.

சரத்குமார் போட்டியா?

நாடார் ஓட்டுகளை மொத்தமாக அள்ளலாம் என்ற நோக்கில் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் இத்தொகுதியில் கூட்டணியோடோ அல்லது தனித்தோ போட்டியிடவாய்ப்புள்ளதாக அக்கட்சியினர் தெரிவித்தனர்.

தற்போதைய எம்.எல்.ஏ.,க்கள்

தூத்துக்குடி- அமைச்சர் கீதா ஜீவன் (தி.மு.க.,)

திருச்செந்தூர்- அனிதா ராதாகிருஷ்ணன் (அ.தி.மு.க.,)

கோவில்பட்டி - எல்.ராதாகிருஷ்ணன் (அ.தி.மு.க.,)

ஒட்டப்பிடாரம் (தனி)- மோகன் (அ.தி.மு.க.,)

விளாத்திகுளம் - சின்னப்பன் (அ.தி.மு.க.,)

ஸ்ரீவைகுண்டம்- செல்வராஜ் (காங்.,)

(நீக்கப்பட்ட சாத்தான்குளம் தொகுதி)- ராணி வெங்கடேசன் (காங்.,)

யாருக்கு வெற்றிவாய்ப்பு:

தூத்துக்குடி மாவட்டம், அ.தி.மு.க.,வின் கோட்டை என கருதப்படுகிறது.
தற்போது மொத்தமுள்ள சட்டசபை தொகுதிகளில் அ.தி.மு.க.,வுக்கு நான்கு எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். அதனால் லோக்சபா தேர்தலில் எளிதில் தூத்துக்குடி தொகுதியை கைப்பற்றிவிடலாம் என்ற உற்சாகத்திலுள்ளது அ.தி.மு.க., கூட்டணி. நீக்கப்பட்ட தொகுதியைச் சேர்த்து, தி.மு.க., கூட்டணிக்கு தற்போது மூன்று எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர்.

வேட்பாளர் தேர்வும், தேர்தல் பிரசாரமும், அனைத்து சமுதாயத்தினரின் ஆதரவும் தான் இறுதி வெற்றியை தீர்மானிக்கும்

நன்றி : தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin