திருச்சி மற்றும் சேலத்தில் உள்ள வங்கிகள் மூலமாக புழக்கத்தில் இல்லாத பழைய ரூபாய் நோட்டுகள் சேகரிக்கப்பட்டன. இதில் கிழிந்த நோட்டுகள், 5 ரூபாய் நோட்டுகள், பழைய 100 மற்றும் 10 ரூபாய் நோட்டுகளும் ஏராளமாக குவிந்தது. கிளை வங்கிகள் மூலமும் ரூபாய் நோட்டுக்கள் சேகரிக்கப்பட்டன. மொத்தம் ரூ.170 கோடி மதிப்புள்ள ரூபாய் நோட்டுக்கள் கிடைத்தது.
அனைத்தையும் கட்டு கட்டாக கட்டி பெரிய கண்டெய்னர்களில் அடைக்கப்பட்டது. இந்த கண்டெய்னர்கள் சரக்கு ரெயில் மூலமாக, திருச்சி மற்றும் சேலத்தில் இருந்து, சென்னைக்கு, கொண்டு வரப்பட்டது. இங்கிருந்து லாரிகளில் ஏற்றப்பட்டு, பழைய ரூபாய் நோட்டுக்கள் பாரிமுனையில் உள்ள ரிசர்வ் பாங்க் ஆப் இந்தியா அலுவலகத்திற்கு எடுத்து செல்லப்படுகிறது.

அங்கு முறைப்படி கணக்கு பதிவு செய்தபின் பழைய ரூபாய் நோட்டுக்கள் அனைத்தும் தீயிட்டு கொளுத்தப்படுகின்றன. இதற்கு போலீசார் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக