பள்ளியில் தாடி வைத்திருக்க முஸ்லிம் மாணவர் அனுமதிக்கக்கோருகிறார் !சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு !
மத்தியபிரதேச மாநிலத்தில் உள்ள நிர்மலா கான்வென்ட் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்த மாணவர், முகமது சலீம். பள்ளிக்கூடத்திற்கு தாடியுடன் வந்ததால் இது பள்ளி விதிமுறைக்கு எதிரானது என்று கூறி பள்ளி முதல்வர், இவரை வெளியேற்றி விட்டார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சலீம், ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கு தள்ளுபடியானது. இதனால் அவர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நேற்று நீதிபதி ஆர்.வி.ரவீந்திரன் தலைமையிலான பெஞ்ச் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது சலீம் சார்பில் ஆஜரான வக்கீல், பி.ஏ.கான், `'இந்திய அரசியல் சட்டத்தின் 25-வது பிரிவு மத உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும் என்று கூறியுள்ளது. எனவே மாணவர் பள்ளியை விட்டு வெளியேற்றப்பட்டது விதியை மீறியது ஆகும்' என்று வாதிட்டார்.
இந்த வழக்கை வருகிற 30-ந் தேதிக்கு ஒத்தி வைத்த நீதிபதி ரவீந்திரன், அந்த பள்ளிக் கூடம் அரசு உதவிபெறும் பள்ளியா, இல்லையா? என்பதை அன்று மாணவர் தெரிவிக்கவேண்டும் என்று உத்தரவிட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக