வியாழன், 26 மார்ச், 2009

ராகு காலம் எப்போ...இனி வாட்ச்சைப் பார்த்து அறியலாம்!


அவசர யுகத்தில் கைகடிகாரம் என்பது மக்களின் அத்தியாவசிய பொருட்களில் ஒன்றாகிவிட்டது. சிலருக்கு டைட்டானியம் கடிகாரம் என்றால் ஆசை. சிலருக்கு பிரேஸ்லட் கடிகாரம் என்றால் உயிர் என கடிகார விரும்பிகளை ரகம் ரகமாக பிரித்து கொண்டே போகலாம்.
இந்த வரிசையில் தற்போது இந்தியர்களை அதிகம் கவரும் வகையில் புதிய கடிகாரம் ஒன்று விரைவில் விற்பனைக்கு வரவிருக்கிறது. இது நேரத்தை மட்டும் காட்டாது. கூடவே ராகு காலத்தையும் கணித்துக் காடடுமாம்.
சுவிட்சர்லாந்தை சேர்ந்த இரண்டு நிறுவனங்கள் இதை தயாரித்து வருகின்றன. சுமார் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவில் புழக்கத்தில் இருக்கும் பஞ்சாங்கத்தை அப்படியே கடிகாரத்துக்குள் கொண்டு வந்துள்ளன இந்த நிறுவனங்கள்.
இந்த கடிகாரம் போர்கியாட் என்ற பெயரில் சந்தைக்கு வரவிருக்கிறது. இந்த கடிகாரம் அன்றைய தினத்தில் ராகு காலம் எப்போது வரும் என்பதை முன்கூட்டியே தீர்மானித்து விடுகிறது. அந்த 90 நிமிட ராகு கால நேரத்தை கடிகாரத்தில் இருக்கும் அதற்கான நேர பகுதியில் துல்லியமாக காட்டுகிறது.
அப்பகுதி முழுவதும் ஊதா, சிவப்பு போன்ற வண்ணங்களாலான திரவம் ஒன்று நிரப்பப்படுகிறது. ராகு காலம் வந்தவுடன் அந்த திரவம் கொஞ்சம் கொஞ்சமாக மறைய தொடங்குகிறது. சரியாக ராகு காலம் முடியும் நேரத்தில் அந்த திரவமும் முழுமையாக காலியாகி விடுகிறது.
இந்த கைகடிகாரம் ராகு கலத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க உதவுகிறது. இது இந்திய மக்களிடையே பெரும் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
யாருக்கு உதவுகிறதோ இல்லையோ, தேர்தல் ஜூரத்தில் இருக்கும் அரசியல்வாதிகளுக்கு கண்டிப்பாக உத்தவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin