புதன், 11 மார்ச், 2009

சப்தமின்றி ஓர் இளம் சாதனை ஆலிம்!

காயல்பட்டணம் சொளுக்கார் தெருவைச் சார்ந்த, நஹ்வி அஹ்மத் முஹ்யித்தீன் என்பவரின் மகன் ஹாஃபிழ் நஹ்வி ஏ.எம்.முஹ்யித்தீன் லெப்பை (வயது 26).

துவக்கமாக காயல்பட்டணம் ஹாமிதிய்யா குர்ஆன் ஹிஃப்ழு மத்ரஸாவில் பயின்று, திருக்குர்ஆனை முழுமையாக மனனம் செய்து ஹாஃபிழ் பட்டம் பெற்றுள்ளார்.

சென்னை வண்டலூரிலுள்ள கீழக்கரை புகாரிய்யா அரபிக்கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றி வருகிறார்.

எகிப்து நாட்டிலுள்ள அல்-அஸ்ஹர் பல்கலைக் கழகத்தின் பாடத்திட்டத்தின் கீழ் கேரளாவில் நடத்தப்பட்டு வரும் மர்கஸ{ஸ் ஸகாஃபதிஸ் ஸ{ன்னிய்யா இஸ்லாமிய பல்கலைக் கழகத்தில் பயின்று, முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று, கடந்த 15.01.2009 அன்று ஆலிம் அஸ்ஸகாஃபீ அல் அஸ்ஹரீ என்ற பட்டத்தைப் பெற்றுள்ளார்.

சென்னைப் பல்கலைக் கழகத்தின் மாடர்ன் அரபிக் பாடத்தில் முதல் வகுப்பில் தேர்ச்சி

சென்னை புகாரிய்யா அரபிக்கல்லூரியில் ஆலிம் அல்-புகாரீ படிப்பை முடித்து, கல்லூரியில் மூன்றாமிடம்... அஃப்ஸலுல் உலமா தேர்வில் முதல் வகுப்பில் சிறப்புத் தேர்ச்சி.

சென்னைப் பல்கலைக் கழகத்தில் பி.பி.ஏ. பட்டப்படிப்பு முடித்து, முதல் வகுப்பில் தேர்ச்சி. உருது மொழி பட்டயப்படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி... அரபி, ஆங்கிலம், உருது, மலையாளம் ஆகிய மொழிகளில் புலமை பெற்றுள்ள இவர் இம்மொழிகளில் நடத்தப்படும் முக்கியமானவர்களின் உரைகளுக்கு தமிழ் மொழிபெயர்ப்பாளராகத் திகழ்ந்துள்ளார்.

காயல்பட்டணம் நகரிலிருந்து ஆயிரக்கணக்கான ஹாஃபிழ்களும், ஆலிம்களும் உருவாகியிருந்தாலும், இத்தனை கல்வித் தகுதிகளோடு கற்றுத் தேறியுள்ள நகரின் முதல் ஆலிம் என்ற பெயரைப் பெற்றுள்ளார் இவர்.

நன்றி : நஹ்வி ஷெய்கு அலி ராஜிக் - சிங்கப்பூர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin