இன்ஷா அல்லா, இந்த வருடம் நமது ஊரை சார்த்தவர்கள் ஹஜ் பயணம் செல்ல விரும்புவர்களுக்கு இந்த தகவலை உடன தெரிவிக்கும்
இந்த ஆண்டு ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ள விரும்பும் முஸ்லிம்களிடம் இருந்து விண்ணப்பகளை பெறுமாறு இந்திய ஹஜ் குழு, தமிழக ஹஜ் குழுவிற்கு தெரிவித்துஉள்ளது.
விண்ணப்பம் கிடைக்கும் இடம் :
3ம் தளம், ரோசி டவர்,
எண் 13, மகாத்மா காந்தி சாலை,
நுங்கப்பாக்கம், சென்னை.
என்ற முகவரியில் உள்ள ஹஜ் குழுவின் நிர்வாகிகளிடம் வரும் 5ம தேதி ( நாளை ) முதல் விண்ணப்பம் பெற்றுக்கொள்ளலாம்.
ஆன்லைன் விண்ணப்பம் படிவம் பெற : http://hajcommittee.com/announ_index.php
பரிசீலனைக் கட்டணம் திருப்பி அளிக்கப்பட மாட்டாது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் மார்ச் 31.
குலுக்கலில் தெரிவு செய்யப்பட்டோர், பின்னர் அந்நியச் செலாவணி, விமானக் கட்டணம் மற்றும் பிற கட்டணங்களுக்கான 30 சதவீத தொகையுடன், முழுமையான விண்ணப்பப் படிவத்தை சமர்பிக்க வேண்டும். மீதமுள்ள 70 சதவீதம் தொகையை வரும் ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும்.
சர்வதேச பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே, ஹஜ் விசா வழங்கப்படும் என சவூதி அரசு அறிவித்துள்ளது. எனவே, ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்வோர் சர்வதேச பாஸ்போர்ட் பெற வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக