அபுதாபியில் புனித மீலாது நபி விழா சிறப்பு நிகழ்ச்சிகள் வரும் மார்ச் 13ம் தேதி நடக்கிறது. இந்நிகழ்ச்சியை அபுதாபி இந்திய முஸ்லிம் பேரவை நடத்துகிறது.
அபுதாபி இந்திய முஸ்லிம் பேரவை சார்பில் அகிலங்களின் அருட்கொடை அண்ணல் நபி அவர்களின் பிறந்த தின விழாவினையொட்டி சிறப்புச் சொற்பொழிவு நிகழ்ச்சி வரும் 13ம் தேதி வெள்ளிக்கிழமை, ஹிஜிரி 1430 ரபிவுல் அவ்வல் பிறை 17 மஃரிப் தொழுகைக்குப் பின்னர் அபுதாபி நஜ்தா சாலையில் உள்ள ஈடிஏ ஹெச்.ஆர்.டி. அரங்கில் நடைபெற உள்ளது.
இந்நிகழ்ச்சியில் பரங்கிப்பேட்டை மவ்லவி எஸ்.ஆர். கௌஸ் முஹைதீன் மன்பயீ சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்த உள்ளார்.
சிந்தனைக்கு விருந்தளிக்கும் இந்நிகழ்விற்கு அனைவரும் குடும்பத்துடன் வருகை புரிந்து பயன்பெற கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டுள்ளது.
தொடர்புக்கு : முஹைதீன் அப்துல் காதர்
அலைபேசி : 97150 444 1861
ஈமெயில் : mabdulcader@yahoo.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக