புஷ்ஷின் மீது ஷுவை வீசிய வீரன் முன்தஸிர் அல் ஜய்தி -கமால்
புஷ் புஷ் என்று வாயில் விரலை வைத்து உஷ்என்று உலகே நடுங்கியபோதுஷுவை எய்து அவனைபுஸ் என்று ஆக்கியவன் நீ
நீ வீசியது செருப்பல்ல ஒட்டுமொத்த முஸ்லீம்களின் வெறுப்பு
வல்லரசுகள் கூட ஒரு கொல்லரசை கண்மூடித்தனமாக ஆதரித்த போது அமெரிக்கா ஒரு புல்லரசு என்று புரிய வைத்தவன் நீ
ஆயுதம் வைத்திருப்பவர்கள் கூடஅணு ஆயுதம் வைத்திருப்பவர்கள் கூடஅவன் அடிவருடியபோது ஆயுதம் தேவையில்லை ஆண்மை தான் தேவை என்று தெரிய வைத்தவன் நீ
உலக இனங்கள் எல்லாம் ஒட்டுமொத்தமாய் அவன் கால்கையைப் பிடித்தால் தான் வாழ முடியும் என்ற நினைப்பை உன் இரு அடியால்; அவனுடைய காலையும் கையையும் குறுக வைத்து முஸ்லிம்களின் வீரத்தை ஓரேயடியாய்; உயர்த்தியவன் நீ
அப்பாவிகள் மீது குண்டு வீச ஆணையிட்டுகொக்கரித்த அப்பாவி மீது – ஏவுகணை அல்லஉன் கோபக்கணை எய்தபோது இஸ்லாமியர்கள் இறுமாந்தனர்.உலக இனங்கள் எல்லாம் மூக்கில் விரலை வைத்தனமுஸ்லிமின் தன்மானம் கண்டு
அவனைக் கண்டு அவனியே குனிந்ததுஅவனையே குனிய வைத்தவன் நீ.தலைக்குனிய வைத்தவன் நீ
குனிந்தது தலையல்லஒரு தறுதலை
நீ கொடுத்தது செருப்படி மட்டுமல்ல ஒட்டுமொத்த முஸ்லீம்களின் வெறுப்படியும் கூட….
நன்றி : Kamal
Dubai United Arab Emirates
vkamal@etazenath.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக